காங்கயம் பகுதியில் மழை
திருப்பூர்
காங்கயத்தில் நேற்று காலை முதல் மாலை வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதை தொடர்ந்து மாலை 6 மணியளவில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இரவு 8 மணியளவில் மழை பெய்தது. இந்தமழை அரை மணி நேரத்துக்கும் மேலாக கொட்டி தீர்த்தது.
காங்கயம் நகரில் சென்னிமலை சாலை, திருப்பூர் சாலை, கரூர் சாலை, கோவை சாலை, பழைய கோட்டை சாலை, தாராபுரம் சாலை, பஸ் நிலைய ரவுண்டானா, போலீஸ் நிலைய ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை பெய்தது. இதேபோல காங்கயம் நகர் தவிர சுற்றுவட்டாரகிராமப்புற பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
Next Story