கனியாமூர்பள்ளி கலவரத்தில் ஈடுபட்ட மேலும் 3 பேர் கைது


கனியாமூர்பள்ளி கலவரத்தில் ஈடுபட்ட மேலும் 3 பேர் கைது
x
தினத்தந்தி 6 Jan 2023 12:15 AM IST (Updated: 6 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கனியாமூர் பள்ளி கலவரத்தில் ஈடுபட்ட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம் அருகே கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை மாதம் 17-ந் தேதி கலவரம் நடந்தது. இந்த கலவரத்தின் போது பள்ளி சொத்துகள் மற்றும் பள்ளி பேருந்துகளுக்கு தீ வைத்து எரித்ததோடு, போலீஸ் வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. இந்த கலவரத்திற்கு தூண்டியவர்கள் மற்றும் கலவரத்தில் கலந்து கொண்டு பள்ளி சொத்துகளை சேதப்படுத்தியவர்களை சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்து வருகின்றனர். அந்த வகையில் இதுதொடர்பாக 436 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கலவரத்தின் போது பள்ளி சொத்துகளை சேதப்படுத்தியதாக கள்ளக்குறிச்சி அருகே லட்சியம் கிராமத்தை சேர்ந்த ராமசாமி மகன் மணிகண்டன் (வயது 32), இருசக்கர வாகனங்களை சேதப்படுத்தியதாக சங்கராபுரம் தாலுகா மூரார்பாளையம் கிராமத்தை சேர்ந்த சந்தானம் மகன் மதுபாலன் (22), போலீஸ் வாகனங்கள் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய சின்னசேலம் தாலுகா ராயர்பாளையத்தை சேர்ந்த சீராளன் மகன் சரவணன் (28) ஆகிய 3 பேரை வீடியோ ஆதாரங்களை வைத்து கள்ளக்குறிச்சி சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்தனர்.


Next Story