கனிமொழி எம்.பி. பிறந்தநாள் விழா


கனிமொழி எம்.பி. பிறந்தநாள் விழா
x
தினத்தந்தி 6 Jan 2023 12:15 AM IST (Updated: 6 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கனிமொழி எம்.பி. பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

தென்காசி

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் கனிமொழி எம்.பி. பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆய்க்குடி அமர்சேவா சங்க மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் முத்துச்செல்வி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மதிய உணவை வழங்கி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு தனுஷ்குமார் எம்.பி., செங்கோட்டை ஒன்றிய செயலாளர் ரவிசங்கர், மாவட்ட கவுன்சிலர் கனிமொழி, ஆலங்குளம் யூனியன் தலைவி திவ்யா மணிகண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆய்க்குடி பேரூராட்சி தலைவர் சுந்தர்ராஜன் வரவேற்றார். பொதுக்குழு உறுப்பினர் சாமிதுரை, செங்கோட்டை நகர செயலாளர் வக்கீல் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

* தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில், கடையநல்லூர் மணிக்கூண்டு அருகே நடந்த விழாவிற்கு நகர செயலாளர் அப்பாஸ் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் முன்னிலை வகித்தார். நகர அவைத்தலைவர் முருகையா வரவேற்றார். மாநில தலைமை செயற்குழு உறுப்பினரும், முன்னாள் மாவட்ட செயலாளருமான செல்லத்துரை 'கேக்' வெட்டி பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகளுக்கு வழங்கினார். முடிவில், 1-வது வார்டு செயலாளர் காளிமுத்து நன்றி கூறினார்.

* கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில், கனிமொழி எம்.பி. பிறந்தநாள் விழா பாவூர்சத்திரத்தில் கொண்டாடப்பட்டது. ஒன்றிய செயலாளர் க.சீனித்துரை கலந்து கொண்டு 54 பேருக்கு தென்னங்கன்றுகளையும், கீழப்பாவூர் யூனியன் தலைவர் காவேரி 54 கிலோ லட்டுகளையும் பொதுமக்களுக்கு வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ராஜ்குமார், முத்துமாலையம்மாள் மதிச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story