கட்டாலங்குளத்தில்அழகுமுத்துக்கோன்சிலைக்கு கனிமொழி எம்.பி. மாலை அணிவித்து மரியாதை


கட்டாலங்குளத்தில்அழகுமுத்துக்கோன்சிலைக்கு கனிமொழி எம்.பி.   மாலை அணிவித்து மரியாதை
x

கயத்தாறு அருகே கட்டாலங்குளத்தில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 312-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அவரது உருவச்சிலைக்கு கனிமொழி எம்.பி. அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தூத்துக்குடி

கயத்தாறு:

கயத்தாறு அருகே கட்டாலங்குளத்தில் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன் 312-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அவரது உருவச்சிலைக்கு கனிமொழி எம்.பி. அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

வீரன் அழகுமுத்துக்கோன் பிறந்தநாள் விழா

சுதந்திர போராட்ட வீரர் வீரன் அழகுமுத்துக்கோன் 312-வது பிறந்த நாளை முன்னிட்டு கயத்தாறு அருகே கட்டாலங்குளத்தில் உள்ள அவரது நினைவு மணிமண்டபத்தில் இருக்கும், அவரது சிலைக்கு கனிமொழி எம்.பி, அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதாராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரிசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

தொடர்ந்து மணிமண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.64 பேருக்கு 54 லட்சத்து நாற்பதாயிரம் மதிப்பீட்டில் இலவச வீட்டு மனை பட்டா உள்பட நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கழுகுமலை பேரூராட்சி மன்றத் தலைவரும், கயத்தாறு மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சுப்பிரமணியன், கயத்தாறு மத்திய ஒன்றிய செயலாளர் கருப்பசாமி, கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆ.சின்னப்பாண்டியன், கயத்தாறு நகர செயலாளர் சுரேஷ் கண்ணன். கோவில்பட்டி நகராட்சி தலைவர் கருணாநிதி, மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

வாரிசுகள்

இதற்கிடையில் வீரன் அழகுமுத்துக்கோன் வாரிசுகள் தங்களுக்கு அரசு உரிய மரியாதை அளிக்கவில்லை என குற்றச்சாட்டி அரசு விழாவில் இருந்து புறக்கணித்து வெளியேறினர். இதையெடுத்து அவர்களுடன் கோவில்பட்டி உதவி கலெக்டர் மகாலட்சுமி பேச்சு வார்த்தை நடத்தினர். தொடர்ந்து அவர்களுக்கு உதவி கலெக்டர் சால்வை அணிவித்து மரியாதை செய்தார்.

சாலை மறியல்

இதற்கிடையில் கட்டாலங்குளத்திற்கு இருசக்கரவாகனத்தில் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதை கண்டித்து இளைஞர்கள் நாற்கர சாலையில் இருபுறமுமும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையெடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருடன் அ.ம.மு.க.் தென்மண்டல பொறுப்பாளர் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தினை கைவிட வைத்தார். பின்னர் இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் கட்டாலங்குளம் சென்றனர்.

இந்த நிலையில் வீரன் அழகுமுத்துக்கோன் வாரிசுகளில் ஒருவரான அவரது பேத்தி மீனாட்சி தேவி நிருபர்களிடம் கூறுகையில், வழக்கமாக இந்த விழாவின் போது தங்களுக்கு அரசு சார்பில் மரியாதை செய்யப்படுவது வழக்கம். ஆனால் இந்தாண்டு அவ்வாறு செய்யவில்லை. இனிவரும் காலத்தில் இது போன்று நிகழாமல் அரசு பார்த்துக் கொள்ளவேண்டும், தங்களுக்கு வாரிசு அங்கீகார சான்றிதழ் மற்றும் அரசு உதவி தொகை வழங்க வேண்டும்' என்றார்.

பால்குடம்

இதனை தொடர்ந்து சாரவணாபுரம் கிராமத்தில் இளைஞர் அணி சார்பில் சங்கத்தலைவரான முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மாரிச்சாமி தலைமையில் ஏராளமான பெண்கள் பால்குடம் எடுத்தனர். இதனை தொடங்கி வைத்த மாணிக்கராஜா அழுகுமுத்துகோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த விழாவில் முன்னிட்டு தூத்துக்குடி நெல்லை விருதுநகர், ராமநாதபுரம், கமுதி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கட்டலாங்குளம் வந்து வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Next Story