ரெயிலில் கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சா ஈரோட்டில் சிக்கியது


ரெயிலில் கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சா ஈரோட்டில் சிக்கியது
x

ரெயிலில் கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சா ஈரோட்டில் சிக்கியது.

ஈரோடு

ரெயிலில் கடத்தி வரப்பட்ட 22 கிலோ கஞ்சா ஈரோட்டில் சிக்கியது.

கஞ்சா கடத்தல்

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருளான கஞ்சா பொட்டலங்கள் அதிகளவில் ரெயில்கள் மூலமாக கடத்தப்படுவது சமீபநாட்களாக அதிகரித்துள்ளது. இதை தடுக்க ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், ரெயில்வே போலீசாருடன் இணைந்து ரோந்து மேற்கொண்டு, கஞ்சா கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரள மாநிலம் ஆலப்புழா செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று காலை 7 மணிக்கு ஈரோடு ரெயில் நிலையம் வந்தது. அப்போது ஈரோடு ரெயில்வே போலீசார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி ஒவ்வொரு பெட்டியாக சோதனை செய்தனர். இதில் எஸ்-1 முன்பதிவு பெட்டியில் 41-வது சீட்டுக்கு அடியில் ஒரு பை கேட்பாரற்று கிடந்தது.

22 கிலோ சிக்கியது

அந்த பையை போலீசார் திறந்து பார்த்தபோது அதில் 22 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 20 ஆயிரம் ஆகும். இதுகுறித்து அந்த பெட்டியில் பயணம் செய்த பயணிகளிடம் போலீசார் விசாரணை நடத்தினர். ஆனால் இதுபற்றி தங்களுக்கு எதுவும் தெரியாது என்று பயணிகள் கூறிவிட்டனர்.

இதைத்தொடர்ந்து ஈரோடு ரெயில்வே போலீசார் கஞ்சா பையை கைப்பற்றி, ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் வழக்குப்பதிவு செய்து, ரெயிலில் கஞ்சா கடத்தி வந்த நபர் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.


Next Story