ரெயிலில் 6½ கிலோ கஞ்சா பறிமுதல்
ரெயிலில் 6½ கிலோ கஞ்சா பறிமுதல்
திருப்பூர்
திருப்பூர்
ரெயில்களில் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்கள் கடத்தலை தடுக்கும் வகையில் ரெயில்வே போலீசார் தீவிரசோதனை நடத்தி வருகிறார்கள். நேற்று மேற்கு வங்க மாநிலம் சாலிமரில் இருந்து திருவனந்தபுரத்துக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் காலை 10.50 மணிக்கு திருப்பூர் ரெயில் நிலையத்தில் நடைமேடை எண்.1-ல் வந்தது. திருப்பூர் ரெயில்வே போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாத்துரை, ஏட்டு ராஜ்குமார், காவலர் சுரேஷ் ஆகியோர் ரெயிலில் ஏறி சோதனை செய்தனர்.
அப்போது பொதுஜன பெட்டியில் கழிப்பிடம் அருகே கேட்பாரற்று கிடந்த சாக்கு மூட்டையை சோதனை செய்தபோது அதில் 6½ கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story