மழை வேண்டி கஞ்சி கலய ஊர்வலம்
ராமநாதபுரத்தில் மழை வேண்டி கஞ்சி கலய ஊர்வலம் நடந்தது.
ராமநாதபுரம்
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் ஆர்.ஆர்.சேதுபதி நகரில் அமைந்துள்ள ஆதிபராசக்தி வார வழிபாட்டு மன்றத்தின் சார்பில் மழை வேண்டியும், நாட்டு மக்கள் நலம் பெற வேண்டியும் கலச விளக்கு, வேள்வி பூஜை மற்றும் கஞ்சி கலய ஊர்வலம் நடைபெற்றது. மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் செவ்வாடை அணிந்து தங்களது தலையில் கஞ்சி கலயத்துடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக 5 கிலோமீட்டர் தூரம் மேள தாளங்கள் முழங்க நடந்து சென்று நேர்த்திக்கடனை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியையொட்டி ராமநாதபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Related Tags :
Next Story