கண்ணமங்கலம் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு

கண்ணமங்கலம் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு
x

கண்ணமங்கலம் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்

கண்ணமங்கலம் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தொடங்கி 75 ஆண்டுகள் ஆவதையொட்டி பவள விழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி முன்னாள் மாணவர்கள் ஒருங்கிணைந்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

கூட்டத்திற்கு முன்னாள் மாணவரும் ஓய்வு பெற்ற கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுமான ரவி தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் கருணாநிதி முன்னிலை வகித்தார். இதில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், பல்வேறு பணிகளில் உள்ள முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முன்னாள் மாணவர்கள் சங்க தலைவராக எம் பாண்டியன், செயலாளராக பாஸ்கரன், பொருளாளராக மணிஅரசு, துணை தலைவராக திருஞானசம்பந்தம், துணை செயலாளராக டி.கலையரசு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Next Story