கிருஷ்ணகிரி கோர்ட்டில்கபசுர குடிநீர் வழங்கும் முகாம்


கிருஷ்ணகிரி கோர்ட்டில்கபசுர குடிநீர் வழங்கும் முகாம்
x
கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையிலும், பாதிப்பு ஏற்படாமல் இருக்கவும் கபசுர குடிநீர் வழங்கும் முகாம் நடந்தது. கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) வசந்தி தலைமை தாங்கினார். இதில், வக்கீல்்கள், வழக்கு நடத்துபவர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது. தொடர்ந்து கோர்ட்டில் பணிபுரியும் கர்ப்பிணிகளுக்கு, 5 வகையான பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டன.

இதில் கூடுதல் மாவட்ட நீதிபதி தாமோதரன், மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி சுதா, சிறப்பு சார்பு நீதிபதி அஷ்வாஹ் அகமது, மாவட்ட சட்ட ஆணைக்குழு செயலாளர் ஜெனிபர் மற்றும் வக்கீல்கள் கலந்துகொண்டனர்.


Next Story