கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
கலைஞரின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம்
தஞ்சாவூர்
கும்பகோணம் அருகே துக்காச்சி ஊராட்சி பகுதியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் வட்டார மருத்துவ அலுவலர் அனிதா தலைமையில் நடந்தது. முகாமை அரசு தலைமை கொறடா கோவி. செழியன் தொடங்கி வைத்து குத்துவிளக்கேற்றினார். முகாமில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் திட்ட விளக்கவுரையாற்றினார். இதில் திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சுபா திருநாவுக்கரசு, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் சரவணன், கூகூர் ஊராட்சி மன்ற தலைவர் அம்பிகாபதி, துக்காச்சி ஊராட்சி மன்ற தலைவர் சசிகலா சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சுகாதார ஆய்வாளர் ஜோதிநாதன் நன்றி கூறினார். முகாமில் மருத்துவக்குழுவினர் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
Related Tags :
Next Story