உசிலம்பட்டி அருகே வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம்
உசிலம்பட்டி அருகே வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகே ஆரியபட்டி கிராமத்தில் உள்ள அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் தமிழக அரசு சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். முகாமில் கர்ப்பிணிகளுக்கான சிறப்பு சிகிச்சை, பார்வை குறைபாடு, சர்க்கரை வியாதி, எலும்பு தேய்மானம், மூட்டு வலி, காசநோய் உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டது. மேலும் கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் தடுப்பூசி ஏராளமானோருக்கு போடப்பட்டது. இதில் ஆரியபட்டி ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரிபாண்டி, பன்னியான் ஊராட்சி மன்ற தலைவர் காசிநாதன், செல்லம்பட்டி வட்டார மருத்துவ அலுவலர் பாண்டியராஜன், செல்லம்பட்டி குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் நாகஜோதி மற்றும் மேற்பார்வையாளர் லதா, ஆரியபட்டி ஊராட்சி செயலாளர் முத்துகல்யாணி, சுகாதார ஆய்வாளர்கள் சோலைமலை செல்வம், அருண் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.