தமிழக கிரிக்கெட் அணிக்கு காரைக்குடி மாணவி தேர்வு


தமிழக கிரிக்கெட் அணிக்கு காரைக்குடி மாணவி தேர்வு
x
தினத்தந்தி 27 Sept 2022 12:15 AM IST (Updated: 27 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தமிழக கிரிக்கெட் அணிக்கு காரைக்குடி மாணவி தேர்வு செய்யப்பட்டார்.

சிவகங்கை

காரைக்குடி,

காரைக்குடி சுப்பிரமணியபுரம் 5-வது வீதியில் வசித்து வரும் பாலமுருகன் மகள் பிரியதர்ஷினி.இவர் அழகப்பா மெட்ரிக்குலேசன் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வமுள்ள இவர் சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் பயிற்சியாளர் வரதராஜனிடம் பயிற்சி பெற்று வருகிறார்.வலது கை லெக் ஸ்பின்னர், ஆல்ரவுண்டரான இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 18-ந் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற தமிழ்நாடு பெண்கள் 16 வயதுக்குட்பட்டோர் அணிக்கான தேர்வில் கலந்து கொண்டார்.

நேற்று வெளிவந்த அணித்தேர்வு முடிவில் மாணவி பிரியதர்ஷினி 15 வயதுக்குட்பட்டோருக்கான ரவுண்ட் ராபின் போட்டிகளுக்காக தமிழ்நாடு பெண்கள் அணிக்கு தேர்வாகியுள்ளார்.சிவகங்கை மாவட்டம் சார்பில் தமிழ்நாடு பெண்கள் அணிக்கு தேர்வான முதல் பெண் இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.இந்த மாதம் இறுதியில் சென்னையில் நடைபெறும் ரவுண்ட் ராபின் போட்டிகளில் விளையாட உள்ளார்.சாதனை படைத்த மாணவி பிரியதர்ஷினியை சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகள், பயிற்சியாளர் வரதராஜன், கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்தினார்கள்.


Next Story