கறம்பக்குடி பள்ளி மாணவர்கள் முதலிடம்


கறம்பக்குடி பள்ளி மாணவர்கள் முதலிடம்
x

கறம்பக்குடி பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.

புதுக்கோட்டை

கறம்பக்குடி:

புதுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான கால்பந்து போட்டியில் கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதல் இடம் பெற்று சாதனை படைத்தனர். இதன் மூலம் மாநில அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்றனர். மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களுக்கு தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.


Next Story