காரங்காடு புனித செங்கோல் மாதா ஆலய திருவிழா
காரங்காடு புனித செங்கோல் மாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ராமநாதபுரம்
தொண்டி,
திருவாடானை தாலுகா காரங்காடு கிராமத்தில் புனித செங்கோல் மாதா திருத்தலத்தின் 130-வது ஆண்டு திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது. பங்குத்தந்தை அருள்ஜீவா தலைமையில் மதுரை தமிழக ஆயர் பேரவை சட்ட பிரிவு வக்கீல் அருட்தந்தை கென்னடி புனித செங்கோல் மாதா உருவம் பதித்த கொடியை ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து திருப்பலி மறையுரை நடைபெற்றது. காரங்காடு இறை மக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். 10 நாட்கள் நடைபெறும் இந்த ஆலய திருவிழாவில் தினமும் ஜெபமாலை, பிரார்த்தனை, நவநாள், திருப்பலி, நற்கருணை, ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. வருகிற 1-ந்தேதி மாலை 6 மணிக்கு ஆடம்பர கூட்டு திருப்பலி மற்றும் தேர் பவனி நடைபெறுகிறது. 2-ந் தேதி திருவிழா நிறைவு திருப்பலி, தேர்ப்பவனி மற்றும் கொடி இறக்கமும் நடக்கிறது.
Related Tags :
Next Story