நாலாட்டின்புத்தூரில்கராத்தே கலர் பெல்ட் திறனாய்வு தேர்வு


நாலாட்டின்புத்தூரில்கராத்தே கலர் பெல்ட் திறனாய்வு தேர்வு
x
தினத்தந்தி 9 Nov 2022 12:15 AM IST (Updated: 9 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாலாட்டின்புத்தூரில்கராத்தே கலர் பெல்ட் திறனாய்வு தேர்வு நடந்தது.

தூத்துக்குடி

நாலாட்டின்புத்தூர்:

நாலாட்டின்புத்தூர் தனியார் மகாலில் மினாமி கென் புடோ கராத்தே அமைப்பின் சார்பில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களுக்கு இடையேயான கராத்தே கலர் பெல்ட் திறனாய்வு தேர்வு நடைபெற்றது.

இதில் கழுகுமலை மெடோனாஸ் பள்ளி, விமல் மெட்ரிக் பள்ளி, குருவிகுளம் நார்பர்ட் மெட்ரிக் பள்ளி மற்றும் அரசு பள்ளிகளான கூவாச்சிபட்டி, கொப்பம்பட்டி, பன்னீரூத்து, பனிக்கர்குளம் உள்ளிட்ட அரசு நடுநிலைப் பள்ளி மற்றும் சுற்று வட்டார பகுதி மாணவ, மாணவிகள் 350 பேர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கு தலைமை தேர்வாளராக சிகான்சுரேஷ்செவ்வம் செயல்பட்டார். சிறப்பு விருந்தினர்களாக மகாலட்சுமி மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் சிவா அருணகிரி, கொப்பம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கணேசன், வேப்பங்குளம் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தங்கபாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர். கராத்தே ஆசிரியர்களான நயினாம்பட்டி குமார், கழுகுமலை ஆனந்த், ஹரிஷ் மற்றும் தென்காசி ராஜேந்திரன் ஆகியோர் திறனாய்வு தேர்வினை நடத்தினர். இதற்கான ஏற்பாடுகளை கழுகுமலை கராத்தே மாஸ்டர் வெங்கடேஷ்வரன் செய்திருந்தார்.


Next Story