கற்பக மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா


கற்பக மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா
x

சேலம் அம்மாபேட்டை கற்பக மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா நடந்தது.

சேலம்

சேலம்:

சேலம் அம்மாபேட்டை குண்டு பிள்ளையார் கோவில் தெருவில் கற்பக மாரியம்மன் மற்றும் சந்து காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி திருவிழாவையொட்டி, சேலத்திலேயே முதல்முறையாக கம்ப்யூட்டர் சென்சார்கள் பொருத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்ட அம்மன் உருவம் புற்றிலிருந்து வெளிப்பட்டு கண் அசைத்து அருள் தரும் பிரமாண்ட அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும், அம்மன் கையில் இருந்து பிரசாதமாக எலுமிச்சை கனி வழங்கும் சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. 4 நாட்கள் நடைபெற்ற இத்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். இதற்கான ஏற்பாடுகளை நற்பணி மன்ற குழு ஒருங்கிணைப்பாளர் தனுஷ் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.


Next Story