கறிக்கோழி விற்பனை சரிவு


கறிக்கோழி விற்பனை சரிவு
x
திருப்பூர்


பல்லடம் பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கறிக்கோழி நுகர்வை பொறுத்து விற்பனை விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர். இந்நிலையில் கடந்த சில வாரங்களாக சீராக இருந்த கறிக்கோழி விற்பனை

தற்போது புரட்டாசி மாதம் பிறந்துள்ளதால் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கறிக்கோழி பண்ணையாளர் ஒருவர் கூறும்போது " புரட்டாசி மாதத்தால் கறிக்கோழி நுகர்வு குறைந்துள்ளது. புரட்டாசி மாதத்த்தில் பலர் விரதம் மேற்கொள்வதால் அசைவம் உண்பதில்லை. இதனால் ஆடு, கோழி, மீன் உணவுகளை தவிர்த்து விடுவார்கள். இதனால் கறிக்கோழி நுகர்வு குறைந்துள்ளது.நுகர்வு குறைந்து கறிக்கோழி தேக்கம் அடையாமல் இருக்க உற்பத்தியை குறைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளோம்" என்றார்.


Next Story