கரிமேடு புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது


கரிமேடு புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
x
தினத்தந்தி 6 Jun 2023 2:27 AM IST (Updated: 7 Jun 2023 7:53 AM IST)
t-max-icont-min-icon

கரிமேடு புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மதுரை


கரிமேடு புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

புனித அந்தோணியார் ஆலயம்

மதுரை கரிமேடு புனித அந்தோணியார் ஆலயத்தின் 133-ம் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை புனித அருளானந்தர் கல்லூரி முதல்வர் அருட்தந்தை காட்வின் ரூபஸ் திருவிழா கொடி ஏற்றி வைத்து சிறப்பு திருப்பலி நிறைவேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

இதனைதொடர்ந்து வருகிற 18-ந்தேதி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை வழிபாடும், அதனைத் தொடர்ந்து சிறப்பு திருப்பலியும் நடைபெறுகிறது.

தேர்பவனி

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 17-ந்தேதி மாலை 6:30 மணிக்கு டி நோபிலி மெட்ரிக் பள்ளி முதல்வர் அருட்தந்தை அடைக்கலராஜா, பள்ளி துணை முதல்வர் அருட்தந்தை ஆனந்த் ஆகியோர் திருவிழா சிறப்பு திருப்பலி நிறைவேற்றி புனித அந்தோணியார் திருஉருவம் தாங்கிய மின் அலங்கார தேர் பவனியை தொடங்கி வைக்கின்றனர்.

இந்த தேர், முக்கிய வீதிகளான மோதிலால்ரோடு, ஆரப்பாளையம், ஏ.ஏ.ரோடு, புதுஜெயில் ரோடு, கரிமேடு வழியாக ஆலயம் வந்தடைகிறது.18-ந்தேதி மாலை 6.30 மணிக்கு நன்றி திருப்பலியும், தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. 19-ந்தேதி காலை சமபந்தி விருந்து நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஞான ஒளிவுபுரம் புனிதவளனார் ஆலய பங்குத்தந்தை ஜோசப், உதவி பங்குத்தந்தை சின்னதுரை, கரிமேடு அந்தோணியார் ஆலய நிர்வாகிகள், ஜெபமாலைமாதா அன்பிய மண்டல இறை மக்கள் செய்து வருகின்றனர்.


Next Story