கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் கடத்திய வாலிபர் கைது


கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் கடத்திய வாலிபர் கைது
x

நாட்டறம்பள்ளி அருகே கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்-இன்ஸ்பெக்டர்கள் முனிரத்தினம், ரவி மற்றும் போலீசார் நாட்டறம்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாட்டறம்பள்ளி பஸ் நிலையம் அருகே சந்தேகத்தின் பேரில் சுற்றி திரிந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். அவரிடம் நடத்திய தீவிர விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம் சித்தூர் சில்லகுண்டலப்பள்ளி பகுதியை சேர்ந்த ஜலபதி என்பவரது மகன் ராம்ராஜிவ் (வயது 30) என தெரிவித்தார். சோதனையில் 180 மில்லி கொள்ளளவு கொண்ட ககர்நாடக மாநில மது பாக்கெட்டுகளை 2 பைகளில் வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலிசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.


Related Tags :
Next Story