ஓடும் ரெயிலில் லேப்டாப், செல்போன் திருடிய கர்நாடக வாலிபர் கைது


ஓடும் ரெயிலில் லேப்டாப், செல்போன் திருடிய கர்நாடக வாலிபர் கைது
x

ஓடும் ரெயிலில் லேப்டாப், செல்போன் திருடிய கர்நாடக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

ஓடும் ரெயிலில் லேப்டாப், செல்போன் திருடிய கர்நாடக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருப்பதி பகுதியை சேர்ந்த நாராயண ரெட்டி என்பவரின் மகன் பார்த்தசாரதி (வயது 23). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் 4-ம் ஆண்டு படித்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு திருப்பதியிலிருந்து சாம்ராஜ் நகர் வரை செல்லும் விரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலில் பொதுப்பெட்டியில் பயணம் செய்துள்ளார். இருக்கைக்கு மேல் உள்ள ரோக்கில் தனது லேப்டாப், செல்போன், சான்றிதழ்கள் உள்ளிட்ட பொருட்கள் கொண்ட பச்சை நிற பேக்கை விட்டு தூங்கி உள்ளார்.

ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தை கடந்து சென்றபோது ரேக்கில் வைத்த பேக்கை பார்த்தசாரதி பார்த்துள்ளார். அப்போது அவரது பேக் இல்லாததை கண்டு அதிர்ச்சடைந்துள்ளார்.

நேற்று கல்லூரி முடித்துவிட்டு மீண்டும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் வந்து புகார் செய்தார். அதன்பேரில் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உஷாராணி மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபரை தேடிவந்தனர்.

நேற்று ரெயில் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்தின் பேரில் வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறியதால் அந்த வாலிபரை ரெயில்வே போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர் கர்நாடக மாநிலம், பிஜப்பூர், சிந்தாகி அடுத்த கோரஹள்ளி பகுதியை சேர்ந்த மல்லையா ஹியர்மாத் என்பவரின் மகன் விரேஷ் (வயது 19) என்பதும் இவர் சாம்ராஜ் எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்த கல்லூரி மாணவனின் சோல்டர் பேக்கை திருடியதும் தெரிய வந்தது.

இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து லேப்டாப், செல்போன் உள்ளிட்ட பொருட்களை மீட்டு பார்த்தசாரதியிடம் ஒப்படைத்தனர். பின்னர் விரேஷை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story