கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில் கார்த்திகை வழிபாடு


கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில் கார்த்திகை வழிபாடு
x
தினத்தந்தி 17 Jun 2023 12:15 AM IST (Updated: 17 Jun 2023 12:57 PM IST)
t-max-icont-min-icon

திருநகரி கல்யாண ரங்கநாத பெருமாள் கோவிலில் கார்த்திகை வழிபாடு நடந்தது இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

மயிலாடுதுறை

திருவெண்காடு:

திருவெண்காடு அருகே திருநகரியில் கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவில் 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றாகும். ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள், இந்த கோவிலில் திருமணம் செய்து கொண்டதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. அதன் காரணமாகவே இந்த கோவில் கல்யாண ரங்கநாத பெருமாள் கோவில் என அழைக்கப்படுகிறது. வைணவ பெரியார்களில் திருமங்கை ஆழ்வார் இந்த பகுதியை ஆண்டதாக புராண வரலாறுகள் கூறுகின்றன. மிகவும் சிறப்பு பெற்ற இந்த கோவிலில் நேற்று கார்த்திகை மற்றும் ஆனி மாதப் பிறப்பு வழிபாடு நடந்தது. இதனை ஒட்டி கல்யாண ரங்கநாத பெருமாள் மற்றும் திருமங்கை ஆழ்வாருக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன. இதில் கோவில் நிர்வாக அதிகாரி அன்பரசன், மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், வைணவ அடியார்கள் திரு கூட்டத் தலைவர் வக்கீல் ரகு நந்தன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story