முருகன் கோவில்களில் கார்த்திகை வழிபாடு
வேதாரண்யம் பகுதி முருகன் கோவில்களில் கார்த்திகை வழிபாடு
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் சாமி கோவிலில் ஆறுமுக கடவுளுக்கும், வெளிப்பிரகாரத்தில் உள்ள மேலக்குமரருக்கும் கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
பின்னர் சாமி வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதேபோல் கோடியக்காடு அமிர்தகடேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத அமிர்தகர சுப்பிரமணிய சுவாமிக்கு பால் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் அபிஷேகங்கள் நடந்தது. பின்னர் விபூதி அலங்காரத்துடன் சாமி வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதேபோல், தோப்புத்துறை கைலாசநாதர்கோவில், ஆறுகாட்டுத்துறை கற்பகவிநாயகர் கோவில், வேதாரண்யம் நகரில் அமைந்துள்ள நாட்டுமடம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் உள்ள முருகனுக்கு கார்த்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு முருகனை வழிபட்டனர்.