திருச்செந்தூரில் காருகுறிச்சி தேவர் மகாஜன சங்க பொதுக்குழு கூட்டம்


திருச்செந்தூரில் காருகுறிச்சி தேவர் மகாஜன சங்க பொதுக்குழு கூட்டம்
x
தினத்தந்தி 27 Sept 2023 12:15 AM IST (Updated: 27 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் காருகுறிச்சி தேவர் மகாஜன சங்க பொதுக்குழு கூட்டம் நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் வடக்குரதவீதியில் உள்ள பசும்பொன் தேவர் மஹாலில் தமிழக காருகுறிச்சி தேவர் மகாஜன சங்க பொதுக்குழு கூட்டம் மற்றும் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு, சங்கத்தலைவர் நாராயணன் தலைமை தாங்கினார். செயலாளர் பால்ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். மாணவி ஜெயதர்ஷினி வரவேற்று பேசினார். சங்க செயலாளர் பால்ராமச்சந்திரன் ஆண்டறிக்கை வாசித்தார்.

பின்னர், முக்காணி பஞ்சாயத்து தலைவர் தனம், பேராசியை ஜெயந்தி, பொறியாளர்கள் சிவகீர்த்தி, பி.என்.ராஜா, ஆசிரியர் சுடலைமுத்து, சண்முகசுந்தரம் ஆகியோர் வாழ்த்தி பேசினர். கடந்த கல்வியாண்டில் 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவியருக்கு கவுரவ ஆலோசகர் குமார், நிர்வாகிகள் கணேசன், நாராயணன், ஆனந்த், பாலசுப்பிரமணியன், ராமர், சுரேஷ்குமார், மந்திரமூர்த்தி, வெற்றிச்செல்வன் ஆகியோர் பரிசுகள் வழங்கினர். விழாவில், சங்க நிர்வாக கமிட்டியினர் மற்றும் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை காருகுறிச்சி தேவர் மகாஜன சங்கத்தினர், காருகுறிச்சி மறவர் அறக்கட்டளை மற்றும் தேசிய தெய்வீக அறக்கட்டளையினர் செய்திருந்தனர். சங்க மேலாளர் கந்தன் நன்றி கூறினார்.


Next Story