கருணாநிதி நினைவுதினம் அனுசரிப்பு:தூத்துக்குடியில் தி.மு.க.வினர் அமைதி ஊர்வலம்
கருணாநிதி நினைவுதினத்தை முன்னிட்டு அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் தூத்துக்குடியில் தி.மு.க.வினர் அமைதி ஊர்வலம் நடத்தினர்.
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் தி.மு.க.வினர் அமைதி ஊர்வலம் நடத்தினர்.
அமைதி ஊர்வலம்
முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க சார்பில் அமைதி ஊர்வலம் நடந்தது. இந்த அமைதி ஊர்வலத்திற்கு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தலைமை தாங்கினார். மேயர் ஜெகன்பெரியசாமி, மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி புதியபஸ் நிலையம் முன்பிருந்து அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் உருவ படத்துடன் தொடங்கிய ஊர்வலம், கலைஞர் அரங்கம் வரை நடந்தது. தொடர்ந்து அங்கு உள்ள கருணாநிதியின் உருவச்சிலைக்கு அமைச்சர், மேயர் மற்றும் கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் மாவட்ட, மாநகர, நகர, ஒன்றிய, பேரூர், வட்டக் கழக நிர்வாகிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
விளாத்திகுளம்
விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் 5-ம்ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட கருணாநிதியின் உருவப்படத்திற்கு மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் விளாத்திகுளம் தி.மு.க கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதே போல் எட்டயபுரம் நகர தி.முக. சார்பில் 15 வார்டுகளிலும் கருணாநிதியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
கோவில்பட்டி
கோவில்பட்டி அண்ணா பஸ் நிலையம் முன்பு நகர தி.மு.க. சார்பில் கருணாநிதி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அவரது உருவப்படத்திற்கு நகர தி.மு.க. செயலாளரும், நகரசபை தலைவர் கருணாநிதி மலர் தூவி மரியாதை செலுத்தி, அன்னதானம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் தலைவர் கஸ்தூரி சுப்புராஜ், தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
எட்டயபுரம் ரோடு மத்திய ஒன்றிய தி.மு.க. அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர் முருகேசன் தலைமையில் கருணாநிதி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விவசாய அணி மாவட்ட அமைப்பாளர் சந்தனம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பசுவந்தனை ரோடு நாடார் மேல்நிலைப்பள்ளி சந்திப்பில் கருணாநிதி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
இனாம் மணியாச்சி சந்திப்பில் மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளர் ரமேஷ் ஏற்பாட்டில் கருணாநிதி நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. அவரது உருவப்படத்திற்கு தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் மலர் அஞ்சலி செலுத்தினர்.
ஆறுமுகநேரி
ஆத்தூர் நகர தி.மு.க. சார்பில் மெயின் பஜாரில் கருணாநிதியின் 5-வது ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. பின்னர் பஜாரில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த அவரது உருவப்படத்திற்கு ஆழ்வார்திருநகரி யூனியன் தலைவர் ஜனஹர், ஆழ்வார்திருநகரி கிழக்கு ஒன்றிய தி.மு.க.செயலாளரும் மேலாத்தூர் கிராம பஞ்சாயத்து தலைவருமான ஏ. பி. சதீஷ்குமார், ஆத்தூர் நகர பஞ்சாயத்து தலைவர் ஏ.கே.கமாலுதீன், ஆத்தூர் நகர செயலாளர் எம்.பி
முருகானந்தம், விவசாய தொண்டர் அணி செயலாளர் சுப்பிரமணியம், விவசாய அணி துணை அமைப்பாளர் கோபி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் ஆறுமுகநேரி மெயின் பஜாரில் நகர தி.மு.க. சார்பில் நகர செயலாளர் நவநீத பாண்டியன் தலைமையில் கருணாநிதி நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. அங்கு அவரது உருவப்படத்திற்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சாயர்புரம்
சாயர்புரம் மெயின் பஜாரில் நகர தி.மு.க. சார்பாக கருணாநிதியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சாயர்புரம் நகர செயலாளர் கண்ணன் தலைமையில் கட்சியினர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
ஸ்ரீவைகுண்டம் மத்திய ஒன்றிய தி.மு.க. சார்பாக சாயர்பரத்திலுள்ள ஒன்றிய கட்சி அலுவலகத்தில் கருணாநிதியின் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மத்திய ஒன்றிய செயலாளர் ரவி தலைமை தாங்கி கருணாநிதியின் உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
கயத்தாறு
கயத்தாறில் கருணாநிதி நினைவு தினத்தை முன்னிட்டு பேரூராட்சி அலுவலகம் முன்பு அவரது படத்திற்கு கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச்செயலாளர் ராஜதுரை தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அயலகபிரிவு துணை செயலாளர் இஸ்மாயில், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் மாரியப்பன் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.
இதேபோல் கயத்தாறு பேரூர் செயலாளர் சுரேஷ்கண்ணன் தலைமையில் கருணாநிதி நினைவுநாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் கயத்தாறு பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் கோதண்டராமர், தூத்துக்குடி மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் கே.கே.ஆர்.அய்யாத்துரை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
வானரமுட்டி
நாலாட்டின்புத்தூர் அருகே உள்ள வானரமுட்டியில் கருணாநிதியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு தி.மு.க. மாவட்ட பிரதிநிதி மாரியப்பன் தலைமை தாங்கி, கருணாநிதி உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் வானரமுட்டி பஞ்சாயத்து தலைவர் இசக்கியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.