கரூர் மாநகராட்சி மண்டல அலுவலகம் திறப்பு விழா
கரூர் மாநகராட்சி மண்டல அலுவலகம் திறப்பு விழா நடந்தது.
கரூர்
கரூர் செங்குந்தபுரம் 3-வது கிராசில் நேற்று கரூர் மாநகராட்சி மண்டலம் 2 அலுவலகம் திறப்புவிழா நடைபெற்றது. இதற்கு கரூர் மாநகராட்சி மண்டலம் 2 தலைவரும், மத்திய மேற்கு மாநகர பொறுப்பாளருமான அன்பரசன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி வைத்தார். இதில் மேயர் கவிதா கணேசன், துணை மேயர் தாரணி சரவணன், மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், தி.மு.க. மாநகர பொறுப்பாளர்கள் கோல்டு ஸ்பாட் ராஜா, எஸ்.பி.கனகராஜ், சுப்பிரமணியன், கணேசன், இளைஞரணி பொறுப்பாளர் சக்திவேல், மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story