லட்சுமி நரசிம்மர் கோவிலில் கருடசேவை உற்சவம்


லட்சுமி நரசிம்மர் கோவிலில் கருடசேவை உற்சவம்
x
தினத்தந்தி 8 Jun 2022 12:00 AM IST (Updated: 8 Jun 2022 12:00 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்காடு அருகே லட்சுமி நரசிம்மர் கோவிலில் கருடசேவை உற்சவம் திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்

மயிலாடுதுறை

திருவெண்காடு:

திருவெண்காடு அருகே உள்ள திருவாலி கிராமத்தில் லட்சுமி நரசிம்மர் கோவில் உள்ளது. இந்த கோவில் பஞ்ச நரசிம்மர் கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது. பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த கோவிலில் ஆண்டு திருவிழா கடந்த 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு கருட சேவை உற்சவம் நடந்தது. இதனையொட்டி நரசிம்மருக்கு பல்வேறு மங்கள பொருட்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சாமிக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டு கருடவாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டு கருடசேவை உற்சவம் நடந்தது. இதில், கோவில் பரம்பரை அறங்காவலர் முத்துக்குமார், பக்த ஜன சபை தலைவர் ரகுநாதன், மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், ஊராட்சி மன்ற தலைவர் தாமரைச்செல்வி திருமாறன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Related Tags :
Next Story