கசமாடசாமி கோவில் கொடை விழா


கசமாடசாமி கோவில் கொடை விழா
x
தினத்தந்தி 13 May 2023 12:15 AM IST (Updated: 13 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வர்த்தகரெட்டிபட்டி கசமாடசாமி கோவில் கொடை விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே உள்ள வர்த்தக ரெட்டிபட்டி கசமாடசமி, கசமாடத்தி அம்மன் கோவில் கொடை விழா நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை 4 மணிக்கு குடியழைப்பு, 5 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. நேற்று காலை 5 மணிக்கு சிவன் பூஜையும், மதியம் 12 மணிக்கு மதிய கொடையும் நடந்தது. மாலை 5 மணிக்கு பொங்கலிடுதல் நிகழ்ச்சி நடந்தது. இரவில் சாமக்கொடை நடந்தது. விழா நாட்களில் வில்லிசை கச்சேரியும் நடந்தது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து இருந்தனர்.


Next Story