பாதுகாப்பு பணிக்கு சென்ற காட்பாடி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார்
காசி தமிழ் சங்கமம் விழா பாதுகாப்பு பணிக்கு காட்பாடி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சென்றனர்.
வேலூர்
வாரணாசியில் காசி தமிழ் சங்கம நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த விழாவை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் 19-ந்் தேதி தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான மக்கள் காசிக்கு சென்று அங்குள்ள புண்ணிய தலங்களை தரிசித்து வருகின்றனர்.
இதற்காக சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் காசி தமிழ் சங்கம நிகழ்ச்சி பாதுகாப்பு பணிக்கு காட்பாடி ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் புறப்பட்டு சென்றனர். அங்கு அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
Related Tags :
Next Story