கவுந்தப்பாடி காந்திபுரம் பகுதியில்சாக்கடை கால்வாயை சுத்தம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


கவுந்தப்பாடி காந்திபுரம் பகுதியில்சாக்கடை கால்வாயை சுத்தம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x

கவுந்தப்பாடி காந்திபுரம் பகுதியில் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஈரோடு

கவுந்தப்பாடி

கவுந்தப்பாடி காந்திபுரம் பகுதியில் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்யக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சாலை மறியல்

கவுந்தப்பாடி ஊராட்சிக்குட்பட்ட காந்திபுரம் பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கோவை சி.எஸ்.ஐ. திருமண்டல குழு உறுப்பினர் கே.ஆர்.ஜான் தலைமையில் சிறுவலூர் ரோட்டில் திடீரென ஒன்று திரண்டனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் பவானி வட்டார வளர்ச்சி அலுவலர் மாரிமுத்து, கவுந்தப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் பா.வா.தங்கமணி, கவுந்தப்பாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஸ் ஆகியோர் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

கழிவுநீர் வெளியேற்றம்

அப்போது பொதுமக்கள் கூறும்போது, 'காந்திபுரம் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய்களில் கழிவுநீர் அடிக்கடி நிரம்பி வழிந்து ரோட்டுக்கு வந்து விடுகிறது. இதனால் அந்த பகுதிகளில் துர்நாற்றம் வீசி வருகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டு் வருகிறது. மேலும் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகி குழந்தைகளுக்கு அடிக்கடி நோய் தொற்று ஏற்பட்டு வருகிறது. எனவே சாக்கடை கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும்' என்றனர்.

அதற்கு அதிகாரிகள் கூறும்போது, 'கால்வாயை சுத்தம் செய்து கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும' என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சிறுவலூர் ரோட்டில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story