கவுந்தப்பாடி விநாயகர் கோவிலில்உண்டியலை உடைத்து பணம் திருட்டு
பணம் திருட்டு
ஈரோடு
கவுந்தப்பாடியில் கற்பக விநாயகர் கோவில் உள்ளது. அதே பகுதியை சேர்ந்த உத்தர மூர்த்தி (வயது 67) என்பவர் தினமும் காலை கோவிலை திறந்து பூஜை செய்வார். மாலையில் பூட்டிவிடுவார். இந்தநிலையில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு மூர்த்தி கோவிலுக்கு பூஜை செய்ய வந்தார். அப்போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் பதறி அடித்து உள்ளே சென்று பார்த்தார். உள்ளே இருந்த கோவிலின் உண்டியல் பூட்டும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணத்ைத யாரோ திருடிச்சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கவுந்தப்பாடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உண்டியல் பணத்தை கொள்ளையடித்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story