காயல்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் தேர்வு


காயல்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் தேர்வு
x

காயல்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

ஆறுமுகநேரி:

காயல்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் தேர்வு கூட்டம் நகர அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர தலைவர் எம்.ஏ. முகமது ஹசன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் மன்னர் பாதுல் அஷ்ஹாப், செயலாளர் முகமது ஹஸன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முஸ்லிம் லீக் நகர பொருளாளர் சுலைமான் வரவு, செலவு கணக்குகள் வாசித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில பொதுச் செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.எம்.முகமது அபுபக்கர், .தூத்துக்குடி மாவட்ட முஸ்லிம் லீக் தலைவர் மீராசா மரைக்காயர் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள். கூட்டத்தில் புதிய நகர தலைவராக எம். எஸ். நூஹ் சாஹிப், செயலாளராக அபூசாலிக், பொருளாளராக சுலைமான், மற்றும் துணைத் தலைவர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள், ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். நகர தலைவர் நூஹ் சாகிபு நன்றி கூறினார். மேலும் கூட்டத்தில் காயல்பட்டினத்தில் ஜூலை மாதம் சிறுபான்மையினர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் நடத்துவது என்றும், முஸ்லீம் லீக் கட்சி 75- வது ஆண்டை முன்னிட்டு காயல்பட்டினத்தில் 75 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குவது என்றும், நபிகள் நாயகத்தை தரக்குறைவாக பேசிவரும் பா.ஜனதாவினர் மீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசை கேட்டுக்கொள்வது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


Next Story