காயல்பட்டினம் கொம்புத்துறைபுனித முனியப்பர் ஆலய திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி


தினத்தந்தி 3 Jan 2023 12:15 AM IST (Updated: 3 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

காயல்பட்டினம் கொம்புத்துறை புனித முனியப்பர் ஆலய திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலி நடந்தது. இதில் மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை கலந்து கொண்டார்.

தூத்துக்குடி

காயல்பட்டினம்:

காயல்பட்டினம் கொம்புத்துறை புனித முனியப்பர் ஆலய திருவிழா ஆடம்பர கூட்டு திருப்பலியில் மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை பங்கேற்றார். இதில் கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

புனித முனியப்பர் ஆலய திருவிழா

காயப்பட்டினம் கொம்புதுறை புனித முனியப்பர் ஆலய திருவிழா கடந்த 24-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் மறையுறை நற்கருணை ஆசிரும் நடைபெற்றது.

ஒன்பதாவது நாளான நேற்று முன்தினம் காலையில் புத்தாண்டு சிறப்பு திருப்பலியும், மாலையில் திருவிழா மாலை ஆராதனையும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து புனித முடியப்பர் சப்பரபவனி நடைபெற்றது.

ஆயர் ஸ்டீபன் ஆண்டகை

பத்தாம் திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 7 மணி அளவில் தூத்துக்குடி மழை மாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆண்டகை கலந்து ெகாண்டு ஆடம்பர கூட்டு திருப்பலியை நிறைவேற்றினார். இதில் 30-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் முதல் முறையாக நற்கருணை ஆசிர் பெற்றனர். முன்னதாக ஆயரை ஊர் மக்கள் வானவேடிக்கையுடன் ஊர்வலமாக ஆலயத்துக்கு அழைத்து சென்றனர்.

தொடர்ந்து காலை 10 மணிக்கு ஆறுமுகநேரி மக்களுக்காக ஆறுமுகநேரி பங்கு சந்தை அலாசியஸ் அடிகளார் திருப்பலி நிறைவேற்றினார்.

பங்கு தந்தையர்

அதேபோல் புனித முடியப்பர் ஆலய வழி தோன்றல்களுக்காகவும், தொடர்ந்து ஏரல், பழைய காயல், புன்னக்காயல், வீரபாண்டியன்பட்டணம் போன்ற ஊர்களின் சார்பில் அந்தந்த ஊரின் பங்கு தந்தையர் தனித்தனியே திருப்பலி நிறைவேற்றினா். திருப்பலியில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை பிரதீஷ் அடிகளார், கொம்பத்துறை ஊர் நல கமிட்டி தலைவர் போர் தாஸ், மற்றும் ஆலய நிர்வாகத்தினர் சிறப்பாக செய்திருந்தனர். திருவிழாவையொட்டி ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.


Next Story