காயல்பட்டினம் பள்ளி ஆண்டுவிழா
காயல்பட்டினம் எல்.கே.மேல்நிலைப்பள்ளியில் பள்ளி ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி
ஆறுமுகநேரி:
காயல்பட்டினம் எல். கே. மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் 73- வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு பள்ளி தாளாளர் டாக்டர் அஷ்ரப் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக டாக்டர்கள் அப்துல் ரகுமான், சாதிக் ஆகியோர் கலந்து கொண்டனர். பள்ளி செயலர் டாக்டர் முகமது லெப்பை வரவேற்று பேசினார். பள்ளி தலைமை ஆசிரியர் செய்யது அகமது ஆண்டு அறிக்கை வாசித்தார். உதவி தலைமை ஆசிரியர் செய்யது மொய்தீன் நன்றி கூறினார். முன்னதாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பள்ளி முன்பு தொடங்கிய பேரணி, முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
Related Tags :
Next Story