கெங்கையம்மன் கோவில் தேரோட்டம்


கெங்கையம்மன் கோவில் தேரோட்டம்
x

ஆம்பூர் கெங்கையம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் கிருஷ்ணாபுரம் பகுதியில் கெங்கையம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மார்கழி மாத தேரோட்டம் நேற்று நடைபெற்றது. முன்னதாக கெங்கையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மானாட்டம், ஒயிலாட்டம், கோலாட்டம் மற்றும் மேளதாளங்களுடன் கெங்கையம்மனை தேரில் வைத்து, பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.


Next Story