ரெயிலில் கஞ்சா கடத்திய கேரள வாலிபர் கைது


ரெயிலில் கஞ்சா கடத்திய கேரள வாலிபர் கைது
x

ரெயிலில் கஞ்சா கடத்திய கேரள வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் தனிப்படை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உஷாராணி தலைமையில் கண்ணன், அருண்குமார் உள்ளிட்ட ரெயில்வே போலீசார் நேற்று ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்திலும், ஜோலார்பேட்டை மார்க்கமாக செல்லும் ரெயில்களிலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்தப்படுகிறதா என்பது குறித்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஹவுராவில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூர் வரை செல்லும் பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் வந்து நின்றது.

அப்போது தனிப்படை போலீசார் ரெயில் பெட்டியில் சோதனை செய்தபோது இருக்கையின் அடியில் இருந்த பையை சோதனை செய்தபோது அதில் 4 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இருக்கையின் அருகே அமர்ந்திருந்த வாலிபர் ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டதில் கேரள மாநிலம் ஆலப்புழா அடுத்த கோமலாபுரம் பகுதியை சேர்ந்த முகமது ஷரீப் என்பவரின் மகன் ஷபி (வயது 27) என்பதும், ஒடிசா மாநிலம் செமிலிகுடாவில் இருந்து கஞ்சாவை குறைந்த விலைக்கு வாங்கி பெங்களூருக்கு கடத்தியது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்து, 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.


Next Story