டிரைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் முக்கிய நபர் கைது


டிரைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் முக்கிய நபர் கைது
x

டிரைவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் முக்கிய நபர் கைது செய்யப்பட்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் புதிய மதனகோபாலபுரம் பாரதிதாசன் நகர் பகுதியை சேர்ந்த கார் டிரைவர் கணேசனின் வீட்டின் முன்பு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த சம்பவத்தில் முக்கிய நபரான பெரம்பலூர்-எளம்பலூர் ரோடு மேட்டுத்தெருவை சேர்ந்த சக்திவேல் மகன் செல்வா என்ற நீலகண்டனை(வயது 24) போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த நீலகண்டனை போலீசார் நேற்று கைது செய்து, பெரம்பலூர் கிளை சிறையில் அடைத்தனர்.


Next Story