கியாஸ் நுகர்வோர் பாதுகாப்பு குறை தீர்வு கூட்டம்
ஆரணியில் கியாஸ் நுகர்வோர் பாதுகாப்பு குறை தீர்வு கூட்டம் நடந்தது.
திருவண்ணாமலை
ஆரணி
ஆரணி உதவி கலெக்டர் அலுவலகத்தில் ஆரணி வருவாய் கோட்டத்துக்குட்பட்ட ஆரணி, போளூர், கலசபாக்கம், ஜமுனாமரத்தூர் ஆகிய தாலுகா உள்ளடக்கிய கியாஸ் சிலிண்டர் ஏஜென்சிகள் மற்றும் நுகர்வோர் குறைதீர்வு கூட்டம் நடந்தது.
உதவி கலெக்டர் எம்.தனலட்சுமி தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் அலுவலர்கள் வெங்கடேசன், ஸ்ரீதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் குமாரவேலு வரவேற்றார்.
கூட்டத்தில் கஸ்தம்பாடி பகுதியைச் சேர்ந்த ஒரு நுகர்வோர் சிலிண்டர் விலையை விட ரூ.35 அதிகம் பெறுவதாக புகார் எழுப்பினார். சம்பந்தப்பட்ட ஏஜென்சியிடம் பில் கொடுத்தால் அதுக்குண்டான நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்கிறோம் என உதவி கலெக்டர் கூறினார்.
மேலும் கூட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் குறித்தும் பேசப்பட்டது. அதற்கு கியாஸ் சிலிண்டர் ஏஜென்சியினர் பதில் அளித்தனர்.
Related Tags :
Next Story