தர்மபுரி அருகே கல்லூரி மாணவி கடத்தல்
தர்மபுரி
தர்மபுரி:
தர்மபுரி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 18 வயது மாணவி தர்மபுரி அருகே உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் தூங்கி கொண்டிருந்த மாணவி, திடீரென வீட்டிலிருந்து மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் மாணவியை கண்டுபிடிக்க முடியவில்லை. இந்தநிலையில் மாணவியை 18 வயது வாலிபர் கடத்தி சென்றது தெரியவந்தது. இது தொடர்பாக மாணவியின் பெற்றோர் தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் தர்மபுரி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி மற்றும் அவரை கடத்திய வாலிபரை தேடி வருகிறார்கள்.
Next Story