ரெயிலில் கடத்திய 17½ கிலோ குட்கா பறிமுதல்


ரெயிலில் கடத்திய   17½ கிலோ குட்கா பறிமுதல்
x

ரெயிலில் கடத்திய 17½ கிலோ குட்காவை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை,

ரெயிலில் கடத்திய 17½ கிலோ குட்காவை ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

வெளிமாநிலங்களிலிருந்து போைத பொருள்கடத்தப்பட்டு வருவதை தடுக்க போலீசார் உஷார்படுத்தப்பட்டு கண்காணித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திரா, கர்நாடகா மாநில எல்லை பகுதியையொட்டி அமைந்துள்ள முக்கிய சந்திப்பு ரெயில் நிலையமான ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையில் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் நேற்று தீவிர கண்காணிப்பில் இருந்தனர்.

அப்போது கர்நாடக மாநிலம் பெங்களூரில் இருந்து சென்னை நோக்கி செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ் ரெயில் 4-வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது.

போலீசார் ரெயிலின் பின்பக்கம் உள்ள பொதுப் பெட்டியில் கழிவறை அருகே கேட்பாரற்றுக்கு கிடந்த பையை ேசாதனை செய்தபோது அதில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட சுமார் 17½ கிலோ குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.அதனை ரெயில்வே போலீசார பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர். அதற்குள் ரெயில்புறப்பட்டதால் கடத்தல்காரர்களை அவர்களால்பிடிக்க முடியவில்லை.

இது குறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story