வாலிபரை காரில் கடத்தி நகை, செல்போன் பறிப்பு


வாலிபரை காரில் கடத்தி நகை, செல்போன் பறிப்பு
x

திருமங்கலம் அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வாலிபரை காரில் கடத்தி கத்தியை காட்டி மிரட்டி நகை, செல்போனை பறித்து சென்ற 3 பேரை போலீசார் தேடுகிறார்கள்.

மதுரை

திருமங்கலம்,

திருமங்கலம் அருகே இன்ஸ்டாகிராம் மூலம் பழகி வாலிபரை காரில் கடத்தி கத்தியை காட்டி மிரட்டி நகை, செல்போனை பறித்து சென்ற 3 பேரை போலீசார் தேடுகிறார்கள்.

இன்ஸ்டாகிராம் பழக்கம்

திருமங்கலத்தை அடுத்து உள்ள கப்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டி. இவருடைய மகன் காத்தவராயன் (வயது 25). இவர் கப்பலூர் சுங்கச்சாவடி அருகே உள்ள தனியார் உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார். காத்தவராயனுக்கு இன்ஸ்டாகிராமில் அதிக நண்பர்கள் பழக்கம் உண்டு.

இந்த நிலையில் காத்தவராயனுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் செந்தில்குமார் என்பவருடன் நெருங்கிய பழக்கம் ஏற்பட்டது. இதனால் செந்தில்குமாரை தனது ஊர் திருவிழாவிற்கு வரும்படி காத்தவராயன் அழைத்துள்ளார். செந்தில்குமார் காரில் தனது நண்பர்கள் 3 பேருடன் கப்பலூர் சுங்கச்சாவடி அருகே வந்து காத்தவராயனுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தான் தனது நண்பர்களுடன் கப்பலூர் சுங்கச்சாவடி அருகே இருப்பதாக கூறி இருக்கிறார்.

நகை, பணம் பறிப்பு

காத்தவராயன் அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்ற போது காரில் ஏறும்படி கூறியுள்ளனர். மறுப்பு தெரிவித்த காத்தவராயனை வலுக்கட்டாயமாக காருக்குள் இழுத்து போட்டு காரை எடுத்துக்கொண்டு அங்கிருந்து விருதுநகர் நோக்கி புறப்பட்டனர். விருதுநகரில் இருந்து சாத்தூர் செல்லும் சாலையில் கார் சென்றது. விருதுநகருக்கும் சாத்தூருக்கும் இடையே சாலையின் ஓரத்தில் காரை நிறுத்திய கும்பல், காத்தவராயனை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த விலையை உயர்ந்த செல்போன், கழுத்தில் இருந்த 2பவுன் செயின், கையில் வைத்திருந்த பணம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு காத்தவராயனை கீழே இறக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதுகுறித்து காத்தவராயன் திருமங்கலம் நகர் போலீசில் புகார் செய்தார். சம்பவம் குறித்து நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story