2 இளம் பெண்கள் கடத்தலா?
2 இளம் பெண்கள் கடத்தலா? போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 இளம் பெண்கள் கடத்தலா?கீரனூர் அருகே ஆவுடையார்கோவில் பட்டியை சேர்ந்தவர் ராமமூர்த்தி-மாரிகண்ணு. இவர்களது மகள் கவுசல்யா (வயது 17). இந்நிலையில் கணவன்-மனைவிவயலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டில் இருந்த கவுசல்யாவை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாரிகண்ணு கீரனூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை யாரும் கடத்தி சென்றனரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் அண்டக்குளம் அருகே பரவயல் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மகள் பவித்ராவை (18) காணவில்லை என்று உடையாளிபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாயழகு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.