காரில் கடத்த முயன்ற ரூ.3.85 லட்சம் குட்கா, மதுபாட்டில்கள் கடத்தல்


காரில் கடத்த முயன்ற ரூ.3.85 லட்சம் குட்கா, மதுபாட்டில்கள் கடத்தல்
x

பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு காரில் கடத்த முயன்ற ரூ.3.85 லட்சம் குட்கா, மதுபாட்டில்கள் கடத்திய டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி

ஓசூர்

ஓசூர் அட்கோ போலீசார், பத்தலப்பள்ளி பஸ் நிறுத்தம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.3 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பிலான 680 கிலோ குட்கா, கர்நாடக மாநில மது பாக்கெட்டுகள் இருந்தன. இதையடுத்து போலீசார் குட்கா, மதுபாட்டில்கள், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து காா் டிரைவர் மற்றும் உடன் வந்தவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ரவிக்குமார் (வயது22), சுரேஷ்குமார் (26) என்பதும், பெங்களூருவில் இருந்து சேலத்திற்கு குட்கா, மதுபாட்டில்கள் கடத்த முயன்றதும் தெரிய வந்தது. மேலும் இவர்கள் 2 பேரும் சேலம் செவ்வாய்பேட்டை வெங்கட கிருஷ்ணன் சாலையில் வசித்து வருவதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story