சிறுமியை கடத்தி பலாத்காரம்; வாலிபர் போக்சோவில் கைது


சிறுமியை கடத்தி பலாத்காரம்; வாலிபர் போக்சோவில் கைது
x

சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள முத்துவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவரது மகன் அஜித்குமார்(வயது 21). இவர், 15 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, வெளியூருக்கு கடத்தி சென்றார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுமதி விசாரணை நடத்தினார். விசாரணையில், அவர்கள் சென்னையில் இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், அங்கு சென்று அஜித்குமாரை பிடித்து, சிறுமியை மீட்டு ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியிடம் அஜித்குமார் ஆசைவார்த்தை கூறி வெளியூருக்கு கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இது குறித்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிந்து அஜீத்குமாரை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story