ரூ.30 லட்சம் கேட்டு நிதி நிறுவன அதிபர் கடத்தல்?


ரூ.30 லட்சம் கேட்டு நிதி நிறுவன அதிபர் கடத்தல்?
x

செய்யாறு அருகே ரூ.30 லட்சம் கேட்டு நிதி நிறுவன அதிபர் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை

செய்யாறு

செய்யாறு அருகே ரூ.30 லட்சம் கேட்டு நிதி நிறுவன அதிபர் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெம்பாக்கம் தாலுகா நாட்டேரி கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன். இவர் உறவினர்களான சுரேஷ், வடிவேலு ஆகியோருடன் அசனமாப்பேட்டை பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ராமச்சந்திரன் நிதி நிறுவனத்தை பூட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் பெருங்கட்டூர் - பிரம்மதேசம் சாலை வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பின்தொடர்ந்து வந்த காரில் இருந்தவர்கள் ராமச்சந்திரன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வழி கேட்பது போல நாடகமாடி காருக்குள் இழுத்துப் போட்டு காரில் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. அவர்கள் ராமச்சந்திரனை கத்தியால் கையில் வெட்டிவிட்டு 50 ஆயிரம் ரொக்க பணத்தையும், கழுத்தில் இருந்த 2 பவுன் சங்கலியை பறித்துக்கொண்டு செல்போன் மூலம் ராமச்சந்திரன் தம்பி ரவிச்சந்திரனிடம் ரூ.30 லட்சம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து பிரம்மதேசம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் ரவிச்சந்தினை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம கும்பல் ரவிச்சந்திரனிடம் உன் அண்ணன் ராமச்சந்திரனை புதூர் பாலத்தின் அருகே இறக்கி விட்டோம் என தெரிவித்துள்ளனர். இக்கடத்தல் குறித்து செய்யாறு சரக போலீஸ் துணை சூப்பிரண்டு வெங்கடேசன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story