பள்ளி மாணவி கடத்தல்
பள்ளி மாணவி கடத்தல்
விழுப்புரம்
விழுப்புரம்
செஞ்சி தாலுகாவுக்குட்பட்ட கிராமத்தை சேர்ந்த 15 வயது மாணவி அங்குள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று பள்ளிக்குச்சென்ற மாணவி வெகு நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர், விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அந்த புகாரில், தங்கள் மகளை அனிலாடி கிராமத்தை சேர்ந்த மாரிமுத்து மகன் வடிவேல்(வயது 22) என்பவர் ஆசைவார்த்தை கூறி கடத்திச்சென்று விட்டதாக கூறியிருந்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தப்பட்ட மாணவியையும், அவரை கடத்திச்சென்ற வடிவேலையும் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story