பெண்ணை கொலை செய்த கட்டிட தொழிலாளி சிக்கினார்
உடன்குடியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த கட்டிட தொழிலாளியை ஒரு மாதத்துக்கு பின் செவ்வாய்க்கிழமை போலீசார் கைது செய்தனர்.
குலசேகரன்பட்டினம்:
உடன்குடியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த கட்டிட தொழிலாளியை ஒரு மாதத்துக்கு பின் நேற்று போலீசார் கைது செய்தனர்.
பெண் கொலை
உடன்குடி புதுமனை பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் சுயம்பு. பனைத்தொழிலாளி. இவரது மனைவி சுயம்புகனி (வயது 55). இவர்களுக்கு 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே சென்னையில் வசித்து வருகின்றனர். சுயம்பு தைக்காவூரில் தங்கியிருந்து பனை ஏறும் தொழில் செய்து வருகிறார்.
உடன்குடி வீட்டில் தனியாக வசித்து வந்த சுயம்புகனி வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த மாதம் 16-ந் தேதி மதியம் 2 மணியளவில் அவரது சகோதரி முத்துவும் (45), அவரது கணவர் சேகரும் சுயம்புகனி வீட்டுபகுதியில் சென்றனர். அப்போது சுயம்புகனி வீடு பூட்டியிருந்துள்ளது. ஆனால் உள்ளே இருந்து துர்நாற்றம் வீசியதால, சந்தேகம்அடைந்த அவரகள் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, சுயம்புகனி உடல் அழுகிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். அவர் அணிந்திருந்த தங்ககம்மல், மூக்குத்தி மற்றும் கவரிங் நகைகளையும் காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கட்டிட தொழிலாளி கைது
இந்த நிைலயில் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில், திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன் மற்றும் குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜன் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினர், அவரது எதிர்வீட்டில் வசித்து வரும் கட்டிட தொழிலாளியான உடன்குடி புதுமனை கீழத்தெரு அரசு முத்து மகன் அரசன் (56) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில், சுயம்புகனியை கொலை செய்ததை அவர் ஒப்புக் கொண்டார். போலீசார் அவரை கைது செய்தனர்.
காரணம் என்ன?
கொலைக்கான காரணம் குறித்து அவர் போலீசாரிடம் கூறுகையில், கடந்த மாதம் 14-ந்தேதி சுயம்புகனியிடம் கைமாற்றாக ரூ.10 ஆயிரம் பணம் கேட்டேன். அவர் தரமறுத்ததால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நான் சுயம்புகனியை வீட்டிற்குள் தள்ளிவிட்டதில் கீழே விழுந்த அவர் பலத்த காயமடைந்த சுயநினைவு இல்லாமல் கிடந்தார். அவரது கம்மல், வளையல் செயினை கழற்றிக் கொண்டு தப்பி ஓடிவிட்டேன். பின்னர் அவர் இறந்து விட்டது தெரிய வந்தது. இதனால் பயந்து பொன நான் தலைமறைவாக இருந்தேன். நேற்று நான் சிக்கி கொண்டேன், என்றார்.