மூவுலகரசியம்மன் கோவிலில் கொலு வைத்து வழிபாடு
நவராத்திரி விழாவையொட்டி மூவுலகரசியம்மன் கோவிலில் கொலு வைத்து வழிபாடு நடந்தது.
ஊட்டி,
ஊட்டி மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா கணபதி ஹோமத்துடன் கடந்த 25-ந் தேதி தொடங்கியது. கோவிலில் தினமும் அம்மன் புவனேஸ்வரி, துர்க்கை, அன்னபூரணி, பார்வதி, ராஜராஜேஸ்வரி, மகாலட்சுமி, அபிராமி, காமாட்சி சரஸ்வதி ஆகிய வேடங்களில் அருள்பாலிக்கிறார். ஊட்டி காந்தலில் உள்ள மூவுலகரசி அம்மன் கோவிலில் நவராத்திரி விழாவையொட்டி கொலு பொம்மைகள் வைக்கப்பட்டு உள்ளது. கிருஷ்ணர், ஆஞ்சநேயர், பெருமாள், சிவன், குபேரன் விநாயகர், காளை மாடு உள்பட பல சிலைகள் இடம்பெற்று உள்ளன. தொடர்ந்து கோவிலில் தினந்தோறும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்து வருகிறது. கொலு வழிபாட்டில் பக்தர்கள் கலந்துகொண்டு, பஜனை பாடல்களை பாடுகின்றனர். இதேபோல் ஊட்டியில் வீடுகளில் நவராத்திரி கொலு வைக்கப்பட்டு, பூஜைகள் நடந்து வருகிறது. லோயர் பஜாரில் உள்ள விட்டோபா கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 3 மணிக்கு திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது.