மூதாட்டியை கொன்று 2½ பவுன் நகைகள் கொள்ளை
மூதாட்டியை கொன்று 2½ பவுன் நகைகள் கொள்ளை
மன்னார்குடி அருகே மூதாட்டியை கொன்று 2½ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
மூதாட்டி
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த ஏத்தக்குடி காலனி தெருவை சேர்ந்தவர் லட்சுமி (வயது78). இவரது கணவர் ஏற்கனவே இறந்து விட்டார். இவருக்கு 5 மகள்கள். அதில் ஒரு மகளது வீட்டில் லட்சுமி வசித்து வந்துள்ளார். கடந்த 4-ந்தேதி அங்குள்ள மாரியம்மன் கோவிலில் திருவிழா நடந்தது. அன்று இரவு நடந்த இன்னிசை நிகழ்ச்சியை காண லட்சுமி சென்றுள்ளார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.
2½ பவுன் நகைகள் கொள்ளை
இதையடுத்து லட்சுமியின் மகள் மற்றும் உறவினர்கள் மூதாட்டியை பல இடங்களில் தேடினர். இந்தநிலையில் 5-ந்தேதி மாலை வயல்வெளி பகுதியில் லட்சுமி காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். மேலும் அவர் அணிந்திருந்த 2 ½ பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த தலையாமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
வலைவீச்சு
விசாரணையில் கோவில் விழா முடிந்து இரவில் வயல்வெளி பகுதியில் தனியாக வந்த லட்சுமியை மர்மநபர்கள் கொலை செய்து, அவர் அணிந்திருந்த 2½ பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. மூதாட்டியை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.