தமிழ்நாடு கவர்னரின் செயலாளராக கிர்லோஷ் குமார் ஐ.ஏ.எஸ். நியமனம்..!
தமிழ்நாடு கவர்னரின் செயலாளராக கிர்லோஷ் குமார் ஐ.ஏ.எஸ். நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மேலாண் இயக்குனராக இருந்து வந்த ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் கடந்த 2019 ஆம் ஆண்டு தமிழக கவர்னரின் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். அப்போதைய கவர்னர் பன்வாரிலால் புரோகித்துக்கு இவர் தனி செயலாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து கவர்னர் பொறுப்பிற்கு வந்த ஆர்.என்.ரவிக்கும் ஆனந்தரவ் விஷ்ணு பாட்டீலே செயலாளராக தொடர்ந்தார்.
இதையடுத்து மத்திய பள்ளி கல்வி மற்றும் எழுத்தறிவு துறை இணைச்செயலாளராக ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் மாற்றப்பட்டார். அதையடுத்து அவரின் பணியிடம் காலியாக இருந்தது.
இந்நிலையில் கவர்னரின் செயலாளராக கிர்லோஷ் குமார் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீர் அகற்று வாரிய மேலாண் இயக்குனராக டி.ஜி. வினய் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
Related Tags :
Next Story