கே.எம்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் தேசிய தரச்சான்று குழுவினர் ஆய்வு
கே.எம்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் தேசிய தரச்சான்று குழுவினர் ஆய்வு செய்தனர்.
கே.வி.குப்பம்
கே.எம்.ஜி. கலை அறிவியல் கல்லூரியில் தேசிய தரச்சான்று குழுவினர் ஆய்வு செய்தனர்.
குடியாத்தம், கே.எம்.ஜி.கலை, அறிவியல் கல்லூரியில் இரண்டாவது சுற்று தேசியத் தரச்சான்று வழங்குவதற்கான ஆய்வு 2 நாட்கள் நடைபெற்றது. தேசியத் தர சோதனையாளர்களாக உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த தீனதயாள் உபாத்யாயா, கோரக்பூர் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் விஜய் கிருஷ்ணா சிங், கர்நாடகத்தை சேர்ந்த ஆங்கிலத்துறை பேராசிரியர் விஜய் எப்.நாகண்ணாவர், கோவாவை சேர்ந்த கலைக் கல்லூரி முதல்வர் சந்த் சோஹிரோ பனாத் அம்பியே, அரசு கலைக் கல்லூரி முதல்வர் பிலிப் ரோட்ரிக்னெஸ் இ.எமலோ ஆகியோர் கல்லூரியை ஆய்வு செய்ய வருகை புரிந்தனர். இவர்களை கல்லூரியின் மேலாண்மை அறங்காவலர் கே.எம்.ஜி.பாலசுப்பிரமணியன், தலைவர் கே.எம்.ஜி.சுந்தரவதனம், செயலாளர் கே.எம்.ஜி. ராஜேந்திரன், பொருளாளர் கே.எம்.ஜி.முத்துக்குமார். கல்லூரி முதல்வர் மு.செந்தில்ராஜ் மற்றும் பேராசிரியர்கள், பணியாளர்கள் வரவேற்றனர்.
கல்லூரி குறித்த செயல்பாடுகள், துறை சார்ந்த நிகழ்வுகள், கல்லூரி சார்ந்த மன்ற நிகழ்வுகள் ஆகியவற்றை அவர்கள் ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து தரச்சான்றாளர்கள், கல்லூரியின் முன்னாள் மாணவர்கள், இந்நாள் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. முடிவில் ஒருங்கிணைப்பாளர் கோ.ஷோபாராணி நன்றி கூறினார்.